×

முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புயலால் சாய்ந்த மரங்கள் அகற்றப்படாமல் கிடக்கும் அவலம்

முத்துப்பேட்டை :   முத்துப்பேட்டை அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் கஜாபுயலால் சாய்ந்த மரங்கள் அகற்றப்படாமல்  உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நீண்ட காலமாக ஏராளமான மரங்கள் நட்டு பாரமரிக்கப்பட்டு வந்தன. இதில் மரத்து நிழலில் கூட  பாட வகுப்புகளும் நடத்தபட்டு வந்தது.

இந்நிலையில் அங்கிருந்த பழமையான மரங்கள் விலைஉயந்த மரங்கள் பலவற்றை கடந்த மாதம் கஜா புயலால் சாய்ந்தது. பல மரங்கள் முறிந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக அதே இடத்தில் கிடக்கின்றன. மாணவர்கள் விளையாட வழியின்றி, மரங்கள் இடையூறாக உள்ளது.  இந்த மரங்களை அப்புறப்படுத்தவும் முன்வரவில்லை என பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  மேலும்  மாவட்ட கல்வி நிர்வாகம்  கஜாபுயலால் சாய்ந்த  மரங்களை அகற்ற  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்விஸ்வநாதன் கூறுகையில், பள்ளி வளாகத்தில் கிடக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தநிலையில் அந்தநேரத்தில் வந்த குறுக்கீடுகளால், பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. அதனால் வரும் வாரத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்தாலோசித்து மரம் அகற்றுவது தொடர்பாக முடிவெடுக்கப்பட உள்ளது. மேலும் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றாமல் நிமிர்த்தி நடவும் ஏற்பாடு செய்யப்பட்டு
வருகிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muttappettu Government Men ,Higher Secondary School , Muthupettai, gaja cyclone,Trees fallen
× RELATED இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு, பேரணி