×

கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு; லாரி கவிழ்ந்து காஸ் கசிவு: டிரைவர் மயக்கம், மாலை 6 மணிவரை போக்குவரத்து பாதிப்பு

சென்னை:  சென்னை மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் இருந்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் 18 டன் எடை கொண்ட ராட்சத காஸ் டேங்கர் லாரி ஆந்திர மாநிலம், கடப்பாவுக்கு புறப்பட்டது.  சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த அங்கமுத்து (39) லாரியை ஓட்டினார். தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆரம்பாக்கம் வரை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, ஆங்காங்கே சாலையில் பள்ளங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த வழியாக வந்த காஸ் டேங்கர் லாரி நேற்று அதிகாலை 5 மணியளவில் தாலுகா  அலுவலகம் அருகே வரும்போது, சாலை பள்ளத்தில் இறங்கிய லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. தகவலறிந்ததும் சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். காஸ் கசிவால் லாரியில் மயங்கி கிடந்த டிரைவர் அங்கமுத்துைவ மீட்டு, கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

 இதற்கிடையே, டேங்கரில் உடைப்பு ஏற்பட்டு, காஸ் வெளியேறத் தொடங்கியது. இதனால் அந்தப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. இதை அறிந்ததும் தீயணைப்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த தீத்தடுப்பு கருவிகள் மூலம் விபத்தை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தினால் கும்மிடிப்பூண்டி பகுதியில் சுமார் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து வாயு கசிவு ஏற்பட்டதை தடுக்க, அத்திப்பட்டில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் விரைந்து வந்தனர். கூடுதலாக தேர்வாய் மற்றும் சிப்காட் தீயணைப்பு வீரர்களும் வந்து சிலிண்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jungle ,gas leak ,Larry , Gummidipoondi, truck loses, gossip, traffic
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...