×

துக்கடா அரசியல்வாதி என விமர்சனம்: கமல் மீது வானதி சீனிவாசன் கர்.. முர்…

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், கமல்ஹாசன் மக்கள் பிரச்சினைகள் குறித்து  விவாதிக்க தயாரா? என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சவால் விடுத்தார். இதற்கு மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளர் குமரவேல் சார்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நேரடி விவாதத்துக்கு கமல்ஹாசன் தயாராக உள்ளதாகவும், வானதி சீனிவாசன் போன்ற துக்கடா அரசியல்வாதிகளுடன் விவாதிக்க எங்களது மாணவர் அணியே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிலளித்துள்ள வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது: சாதாரண குடும்பத்தில் இருந்து பொதுவாழ்வில் தடைகளை கடந்து வரும் பெண்களை இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா? இப்படிப் பேசுபவர்கள் பெண்களை எப்படி காப்பாற்றுவார்கள்? என்பதை மக்கள் உணர வேண்டும். இதற்கு கமல்ஹாசன் பதில் கூற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post துக்கடா அரசியல்வாதி என விமர்சனம்: கமல் மீது வானதி சீனிவாசன் கர்.. முர்… appeared first on Dinakaran.

Tags : Vanathi Srinivasan Kar ,Kamal ,Kamal Haasan ,BJP ,Vanathi Srinivasan ,Coimbatore South ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar