×

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் 24ம் தேதி தொடங்குகிறது

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இணைந்து தமிழக பள்ளிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளன.  இந்த போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களைச் சேர்ந்த 64 பள்ளிகள் பங்கேற்ககின்றன.  இம்மாதம் 24ஆம் தேதி போட்டிகள் தொடங்கும். அந்தந்த மாவட்டங்களுக்கு இடையே உள்ள பள்ளிகளுக்கு இடையில் போட்டிகள் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். வெளி மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பெறும் அணியும், சென்னை மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாவது இடம் பெறும் அணிகள் மோதும் போட்டி ஜனவரி 26 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும். இறுதிப் போட்டியும் அங்கு நடைபெற உள்ளது.

சென்னை மாவட்டத்தில்  நடைபெறும் போட்டியில் 16 பள்ளிகள் பங்கேற்கின்றன இதில் மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே அரசு பள்ளியாகும்.  சென்னை பள்ளிகளுக்கானஅனைத்து போட்டிகளும் வேளச்சேரி குருநானக் கல்லூரி விளையாட்டு திடலில் டிச. 24 முதல் டிச.29ம் தேதி வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், இந்தியா சிமென்ட்ஸ் தலைவர் ரமேஷ், முத்தூட் பைனான்ஸ் துணை பொது மேலாளர் அபினவ் ஐயர், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்  அம்பாதி ராயுடு, மோகித் சர்மா ஆகியோர் பங்கேற்றனர். போட்டிக்கான புதிய வெள்ளி கோப்பைகளை அம்பாதி ராயுடு அறிமுகப்படுத்தினார்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  விஸ்வநாதன், “ சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் மிகுந்த வரவேற்பு  பெற்றுள்ளது. இதைப் பார்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் ஜூனியர் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இது போன்ற போட்டிகளை தென்னிந்தியா மற்றும் அகில இந்திய அளவில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் இது போன்ற போட்டிகள் நடைபெறும். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர்கள், கடந்த ஆண்டில் அணியின் செயல்பாடு அடிப்படையில்  பள்ளிகளை தேர்வு செய்வர். அரசுப் பள்ளிகளும் சிறப்பாக விளையாடினால் தகுதி பெற முடியம்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Junior Super Kings , Junior Super Kings ,starts on Series 24
× RELATED ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி-20 போட்டி...