×

புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு பாரத தரிசனம் ரயில் சுற்றுலா : ஆன்மிக தலங்களை பார்க்க வாங்க.. ஐஆர்சிடிசி கூடுதல் பொது மேலாளர் அழைப்பு

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) தென் மண்டல கூடுதல் பொது மேலாளர் கே.ரவிக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: புத்தாண்டை முன்னிட்டு வருகிற 2ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக சென்று ஷீரடியில் சாய்பாபா, பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன், மந்திராலயத்தில் ராகவேந்தர் ஆகிய மகான்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு ஒருவருக்கு 6615 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மார்கழி ஸ்பெஷல் குரு ஸ்தலம் யாத்திரை வருகிற 10ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை வழியாக சென்று ஸ்தல யாத்திரையாக அகோபிலம், நவபிருந்தாவனம், மந்த்ராலயத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு நபர் ஒருவருக்கு 6160 கட்டணமாகும். பொங்கல் திருநாளை முன்னிட்டு 16ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு பாரத தரிச சுற்றுலா ரயில் மைசூர் அரண்மனை, சாமுண்டி மலை, நஞ்சன்கூடு, மேல்கோட், ஸ்ரீரங்கப்பட்டினம், தலைக்காவிரி, பாகமண்டலா மற்றும் கூர்க் போன்ற இடங்களுக்கு செல்கிறது. 5 நாட்கள் யாத்திரைக்கு 5635 கட்டணம்.
கேரளா ஸ்பெஷலாக வருகிற ஜனவரி 22ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும். 5 நாட்கள் சுற்றுலாவுக்கு நபருக்கு 5830 கட்டணம் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bharat Darshan ,train trip ,places ,Pongal ,general manager ,IRCC , Bharat Darshan train trip, Pongal
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி