×

காவேரிப்பாக்கத்தில் குண்டும் குழியுமாக மாறிய நாற்கர சாலை

காவேரிப்பாக்கம்: வேலூர் மாவட்டம் வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட் வரை நான்கு வழி சாலையாகவே இருந்து வந்தது. பின்னர் இந்த சாலையை கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆறு வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கியது. தற்போது இப்பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்த சாலைப்பணி அகலப்படுத்தும்போது சாலையின் அருகே இரண்டு  பக்கமும் தோண்டப்பட்ட பெரிய பள்ளங்கள்  மூடப்படாமல் உள்ளன. இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் சூரிய ஒளியில் செயல்படக்கூடிய சிக்னல்கள் செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது.

இந்நிலையில் வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து ஓச்சேரி பகுதி வரை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அருகே செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது.இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘வாலாஜா டோல்கேட் பகுதியில் செல்லும் வாகங்களுக்கு பணம் வசூலித்தும் சாலைகள் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமலும் மவுனம் காத்து வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு குண்டும் குழியுமான தார் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road ,Kaveripattinam , Cedar Road, Kaveripakkam
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...