×

விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைப்பதற்கு கஞ்சி தொட்டி திறந்து எதிர்ப்பு

சூலூர்: விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சூலூர் அருகே விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை சூலூர் அருகே சுல்தான்பேட்டையில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் கடந்த 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 4வது நாளான நேற்று திமுக., சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் மற்றும் பொதுப்பணி பொன்னுசாமி, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில், அடுப்பு பற்றவைத்து கஞ்சி காய்ச்சி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் முன்னாள் அமைச்சர் பொங்கலுார் பழனிச்சாமி பேசுகையில், ‘எப்போது பேசினாலும் நான் ராஜினாமா செய்வேன் என மிரட்டும் சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், தற்போது விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு எந்த கருத்தையும் சொல்லாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.இன்று 5வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : opening , Agricultural lands, kanji tank, minikapuram
× RELATED சண்முகா கிளினிக்ஸ் திறப்பு விழா