×

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு ஆட்சேபணை எழவில்லை : சமூக தாக்க மதிப்பீட்டு குழு அறிக்கை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வீடான வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எவ்வித ஆட்சேபணையும் எழவில்லை என சமூக தாக்க மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்துள்ளது. சமூக தாக்க மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள அறிக்கையில், வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என கூறப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மட்டுமே மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேதா நிலையத்தில் எவரும் வசிக்காததால் குடும்பங்கள் இடம் பெயரும் பிரச்னைக்கு இடமில்லை என்றும், நினைவிடமாக மாற்றுவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நில எடுப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், உபரியாக காலியிடம் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சரின் இல்லத்தை விடுத்து வேறு இடத்தை நினைவில்லமாக மாற்றுவது இதுவரை பின்பற்றி வந்த முறைகளுக்கு மாறாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalitha, Veta Home, Report
× RELATED பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை...