×

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம்..: வரும் 24ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 24ம் தேதி திமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியி்ன் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24ம் தேதி திங்கட்சிகழமை காலை 10 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புக்கான இடஒதுக்கீடு தொகுதி பட்டியலை பெற்றுக் கொண்டு அவரவர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்டு, ஊராட்சி, பேரூர், ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக ஆய்வு செய்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலை சரிபார்த்து, அதில் மாற்றம் செய்ய வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளின் விவரங்களை இம்மாத இறுதிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று நேற்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் திமுக பொறுப்பாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாக ஆசோசனையும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு குறித்து மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,consultant meeting ,MK Stalin ,Anna Annadhanam , Anna Arivalayam, MK Stalin, DMK, Consultative Meeting, K.Anbazhagan
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...