×

பிசான சாகுபடிக்காக களக்காடு பச்சையாறு அணை திறப்பு : 9,593 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

களக்காடு: பிசான பருவ சாகுபடிக்காக களக்காடு பச்சையாறு அணையை சப்கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார். இதன் மூலம் 9,593 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை உள்ளது. இதன் முழு கொள்ளளவு 50 அடி ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழையின்றி பச்சையாறு அணை நிரம்பவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால், தண்ணீர் வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது அணை நீர்மட்டம் 31.50  அடியாக உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட  வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று அணையில்  இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உத்தரவிட்டார். அதன்படி நேற்று சேரன்மகாதேவி சப்கலெக்டர் ஆகாஷ், அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். மடத்துக்கால்வாய், நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு கால்வாய்களில் விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 9,593 ஏக்கர் நிலங்களும், 110 குளங்களும் பாசன வசதி பெரும்.  தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாய பணிகள் செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு  வலியுறுத்தப்பட்டது. அணை திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மதன சுதாகரன், உதவி பொறியாளர்கள் பாஸ்கர், மூர்த்தி,  முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kalakkadu Pachaiyarai Dam ,land , Kalakkadu, Pachaiyar Dam, Lands
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!