×

கொடுமுடி அருகே மரத்தில் இருந்து பறவைகள் செத்து விழுந்ததால் பரபரப்பு

கொடுமுடி:  ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூரில் திங்கள்சந்தை உள்ளது. இந்த சந்தையில் உள்ள  மரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகளும்,  அணில்களும் வசிக்கின்றன. இந்நிலையில், நேற்று காலை இந்த மரங்களிலிருந்து நூற்றுக்கணக்கில் குருவி, மைனா மற்றும் அணில்கள் திடீரென செத்து கீழே விழுந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பறவைகளும் அணில்களும் செத்துவிழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.  

இதுகுறித்து சென்னசமுத்திரம் பேரூராட்சி செயல்அலுவலர் ஞானமூர்த்தியிடம் கேட்ட போது, திங்கள்சந்தை வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்த  ஏராளமான பறவை. அணில்கள் செத்து மடிந்துள்ளன. அருகில் உள்ள வயல் வெளியில் இருந்த விஷப்பொருட்களை சாப்பிட்டு அவை இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து கொடுமுடி கால்நடைத்துறைக்கு தகவல்  தெரிவித்துள்ளோம். அவர்கள் வந்து பார்த்து விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையான காரணம் தெரியவரும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodumudi , Kodumudi, tree, birds
× RELATED 10 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த மோடி:...