×

அயனாவரம் சிறுமி விவகாரம்: 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான 17 பேர் மீது நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யபட்டது.சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந் வழக்கில், அந்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி உள்பட 17 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையை முடித்து கைதானவர்களுக்கு எதிராக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது.

இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தார். இதனையடுத்து 17 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.   17 பேரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை நிரபராதிகள் என தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் சாட்சி விசாரணைகளுக்காக ஜனவரி 2 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons , Ionavaram, girl affair: Charges , 17 persons
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...