×

பிஎன்பி.யில் 9 கோடி மோசடி: 10 பேர் சிக்கினர்

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 9 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, வங்கி அதிகாரிகள் 8 பேர் உட்பட 10 பேரை சிபிஐ ைகது செய்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி)  வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ₹13,000 கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பிவிட்டனர். இந்த மோசடி நடந்த  தென் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி கிளை பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் மேலும் ₹9 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

 இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மார்ச்சில் வழக்குப் பதிவு செய்தனர். 2017ம் ஆண்டு சந்திரி பேப்பர்ஸ் நிறுவனத்துக்கு பிரீச் கேண்டி வங்கி கிளையில் இருந்து வெளிநாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ₹9  கோடிக்கு கடன் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. இது வராக்கடனில் உள்ளது. இதுதொடர்பாக வங்கியின் 8 அதிகாரிகள், கடன் பெற்ற நிறுவனத்தின் 2 இயக்குநர்களை சிபிஐ கைது செய்தது. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை சி.பி.ஐ. காவலில் வைத்து  விசாரிக்க அனுமதி அளித்து கோர்ட் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PNB , 9 crore , PNB, Fraud, trapped
× RELATED இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: நடால்-டெய்லர் பிரிட்ஸ் பைனலில் பலப்பரீட்சை