×

மேற்கு வங்கத்தில் பாஜ ரத யாத்திரைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

கொல்கத்தா:  மேற்கு வங்க மாநிலத்தில் பாஜ ரத யாத்திரை நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மக்களவை தேர்தலை மனதில்கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதி மக்களையும் சந்திக்கும் வகையில் பாஜ சார்பில் ரத யாத்திரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 34 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படும்  இந்த ரத யாத்திரை கடந்த 7ம் தேதி கூச் பெஹர் மாவட்டத்தில் தொடங்க இருந்தது. ஆனால் இந்த யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனையடுத்து பாஜ சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது.

இதனை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பான ஆவணங்களை கேட்டது. விசாரணையின் முடிவில் பாஜ ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதோடு, சட்டம் மற்றும்  ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசுக்கு உத்தரவிட்டது. இது மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,Bhaj Rath Yatra ,West Bengal , West Bengal, High Court, Bhaj Rath ,Yatra
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...