×

புதிய அமைச்சரவை பதவியேற்றது போலீஸ் இலாகாவை பறித்தார் சிறிசேனா : ரணிலுடன் மோதல் தீரவில்லை

கொழும்பு : இலங்கையில் கடந்த ஒரு மாதமாக நிலவி வந்த அரசியல் குழப்பம், சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்ட ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றார். இதனால், அதிபர் சிறிசேனா - பிரதமர் ரணில்  இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பிரதமர் ரணில் தலைமையிலான 30 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. இதில், ரணில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், குடியேற்றம், வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் நலத்துறை ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சராக திலக் ஜனகா பதவியேற்றார்.

அதே சமயம், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு இலாகாவைசிறிசேனா தனது கைக்குள் வைத்துள்ளார். இலங்கை அரசியல் சாசன சட்டப்படி, உள்நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு துறையை பிரதமர்தான் வகிக்க வேண்டும். மேலும், இலங்கை சுதந்திரா கட்சியிலிருந்து விலகி ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த 3 பேரின் பெயர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்திருந்தார். அவர்களை சிறிசேனா நிராகரித்துள்ளார். இதனால் சிறிசேனா - ரணில் மோதல் இன்னும் தீரவில்லை என தெரிகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Ranil , Sirisena snatched, police portfolio, new cabinet
× RELATED மக்களின் ஆதரவு இருந்ததால் பொருளாதார...