×

வேதாரண்யம் அருகே பள்ளம் தோண்டிய போது அம்மன் சிலை கண்டெடுப்பு

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா மணக்காடு மேற்கு பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியை சுகந்தம் என்பவரின் வீட்டிற்கு அருகே மின்கம்பம் நட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்த பள்ளத்திலிருந்து உலோகத்தாலான பாணையில் சுமார் அரை அடி உயரமும் சுமார் அரைகிலோ எடையுள்ள உலோகச்சிலை கண்டெடுக்கப்பட்டது.

கரியாப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை கைப்பற்றி வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அதன் அருகே வேறு ஏதும் சிலைகள் உள்ளனவா என்று தோண்டி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amman ,dagger ,Vedaranyam , Vedaranyam, groove, amman statue
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்