×

தேன்கனிக்கோட்டை அருகே தோட்டத்தை நாசப்படுத்திய 70 யானைகள் : விரட்ட முடியாமல் வனத்துறை திணறல்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டுள்ள 70 யானைகள் தக்காளி, பீன்ஸ் தோட்டங்களை நாசப்படுத்தி வருகின்றன. அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனப்பகுதியில்  முகாமிட்டு, கடந்த 2 மாதங்களாக பயிர்களை மிதித்தும், தின்றும் நாசம் செய்து வருகின்றன.

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் இருந்து விரட்டப்பட்ட 70 யானைகள், தற்போது தாவரக்கரை, மலசோனை, கெண்டிகானப்பள்ளி, ஒசட்டி, கேரட்டி, ரங்கசந்திரம், சாமநஞ்சபாளையம் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை  நாசம் செய்து வருகின்றன. நேற்று தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் தோட்டங்களையும், ராகி, துவரை, அவரை பயிர்களையும் சேதப்படுத்தின. தொடர்ந்து அட்டகாசம் செய்யும் யானை கூட்டத்தை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். பயிர்கள் அழிந்து வருவதை கண்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : garden ,Dhenkanikkottai , 70 elephants damaged ,garden , Dhenkanikkottai: Forestry
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவுக் கட்டணம் குறைப்பு