×

மழையால் ஆட்டம் பாதிப்பு இலங்கை - நியூசிலாந்து முதல் டெஸ்ட் டிரா

வெலிங்டன்: நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 282 ரன் எடுத்த நிலையில், நியூசிலாந்து 578 ரன் குவித்தது. தொடக்க வீரர் டாம் லாதம் ஆட்டமிழக்காமல் 264 ரன் விளாசினார். கேப்டன்  வில்லியம்சன் 91, ராவல் 43, ராஸ் டெய்லர் 50, நிகோல்ஸ் 50, கிராண்ட்ஹோம் 49 ரன் எடுத்தனர்.

இதையடுத்து, 296 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 13 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், குசால் மெண்டிஸ் - ஏஞ்சலோ மேத்யூஸ் ஜோடி 4ம் நாள் முழுவதும்  நிலைத்து நின்று விளையாடி அசத்தியது. 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் என்ற ஸ்கோருடன் குசால் மெண்டிஸ் (116), ஏஞ்சலோ மேத்யூஸ் (117) இருவரும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.இலங்கை அணி 115 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்த நிலையில், கனமழை காரணமாக ஆட்டம் டிராவில் முடிந்தது. குசால் 141 ரன் (335 பந்து, 16 பவுண்டரி), மேத்யூஸ் 120 ரன்னுடன் (323 பந்து, 11 பவுண்டரி)  ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய நியூசி. வீரர் லாதம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரண்டாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச், ஹேக்லி ஓவல் மைதானத்தில் 26ம் தேதி தொடங்குகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lanka ,New Zealand First , Rain damage, rain, Sri Lanka -, Test , New Zealand
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்