5வது முறையாக தங்க காலணி விருது: மெஸ்ஸி அசத்தல்

பார்சிலோனா: ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான தங்க ஷூ விருதை, பார்சிலோனா அணி வீரர் லியோனல் மெஸ்ஸி 5வது முறையாக வென்றுள்ளார்.ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பார்சிலோனா கால்பந்து அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி (அர்ஜென்டினா), கடந்த சீசனில் மொத்தம் 68 போட்டியில் 34 கோல் அடித்து முதலிடம் பிடித்தார்.

லிவர்பூல் அணியின் முகமது சாலா,  டோட்டன்ஹாம் அணி வீரர் ஹாரி கேன் ஆகியோரின் கடும் போட்டியை முறியடித்த மெஸ்ஸி தங்க ஷூ விருதை 5வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தார்.ரியல் மாட்ரிட் அணி நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ 52 போட்டியில் 26 கோல் போட்டுள்ளார். தற்போது ஜுவென்டஸ் அணிக்காக விளையாடும் ரொனால்டோ, தங்க காலணி விருதை 4 முறை வென்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Messi Wacker , Golden Shoes, Award, Messi Wackling
× RELATED உலக மல்யுத்த போட்டி: இரண்டு முறை...