×

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க.வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவராக ஓ.ராஜா பணியாற்றியிருக்கிறார். மதுரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவராக இன்று பொறுப்பேற்ற நிலையில், ஓ.ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுகவின் செய்தி அறிக்கையின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கிளை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையப்பம் இட்டு இந்த செய்தி அறிக்கையானது வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது அதிமுகவினுடைய கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கலங்கத்தை ஏற்படுத்தி அவப்பெயரை உண்டாக்கும் பட்சத்தில் செயல்பட்டதால் அவர் தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : O Raja ,Deputy Chief Minister ,O.Panniriselvam ,AIADMK , O Raja AIADMK, anti-party action and dismissal
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு