×

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘கால் யுவர் கலெக்டர்’ திட்டம் அறிமுகம்

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கால்யுவர் கலெக்டர் (அழையுங்கள் உங்கள் ஆட்சியரை) என்ற புதிய திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிமுகப்படுத்தியுள்ளார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில், கால் யுவர் கலெக்டர் 86808 00900 அழையுங்கள் உங்கள் ஆட்சியரை என்ற புதிய வாட்ஸ் அப் பதிவு மையம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு கால் யுவர் கலெக்டர் என்ற திட்டத்திற்கான புதிய வாட்ஸ்அப் சேவையை (வாட்ஸ்அப் எண்: 86808 00900) தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கால் யுவர் கலெக்டர் 8680800900  என்ற புதிய வாட்ஸ் அப் பதிவு மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்களின் குறைகளை தீர்வு காண வேண்டும். மேலும், உங்களது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் எடுத்துக்கூறி அவர்களது குறைகளையும் களைய தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி சப்கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், சப்கலெக்டர் (பயிற்சி) அனு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Introduction ,Collector ,Thoothukudi District , Thoothukudi, Call Your Collector, Project
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...