மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் வயிற்று வலி காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில், பித்தப்பையில் கல் இருப்பது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் ரத்தத்தை மெலிதாக்கும் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி சரத் பவாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் மறு அறிவிப்பு வரும் வரை, அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.* அமித்ஷா உடன் சந்திப்பு?இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை சரத்பவார் அகமதாபாத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல் கசிந்துள்ளது. டெல்லியில் அமைச்சர் அமித்ஷாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது,’’ என்று அவர் மழுப்பலாக பதில் கூறினார். ஆனால், “பவார், ஷா சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை. குழப்பத்தை விளைவிக்கவே இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன,’’ என்று தேசியவாத காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.’…
The post மருத்துவமனையில் சரத்பவார் அனுமதி appeared first on Dinakaran.
