×

கூட்டணி கட்சி ஆதரவை விலக்கி கொண்டதால் பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா

பிரசல்ஸ்: கூட்டணி கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென விலக்கி கொண்டதால் பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  லகளாவிய அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக சார்லஸ் மைக்கேல் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து கூட்டணி பெல்மிஸ்ட் தேசிய கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக திடீரென அறிவித்தது. இதனால் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தனது அரசின் மெஜாரிட்டியை பெல்ஜியம் நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.

ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள விரும்பாத பிரதமர் மைக்கேல் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து பெல்ஜியம் மன்னர் பிலிப்பிடம் தனது ராஜினாமா கடிதத்தை சார்லஸ் மைக்கேல் ஒப்படைத்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து மன்னர் பிலிப் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மே மாதம் பெல்ஜியம் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரை பிரதமர் பதவியில் இருக்குமாறு பிரதமர் மைக்கேலை மன்னர் கேட்டுக்கொண்டடுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன இதனிடையே அகதிகள் குறித்த ஐநா ஒப்பந்தத்திற்கு எதிராக பிரசல்ஸ் நகரில் சமீபத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றபோது மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,Belgian ,
× RELATED பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல்...