×

‘கள்’ இறக்குவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் பனைத்தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: ‘கள்’ இறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என, மாநில பனைத் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சாத்தையா வலியுறுத்தினார். இதுகுறித்து சென்னையில், அவர் அளித்த பேட்டி: இந்தியாவில், 10 கோடி பனைமரங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும், 5 கோடி மரங்கள் உள்ளன. இதைநம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களின் நிலைகுறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

அதில், ‘தொழிலாளர்களுக்கு சொந்த நிலம் இல்லை, ஆண்டுதோறும், 8 மாதங்கள் மட்டுமே தொழில் வாய்ப்பு இருக்கிறது.மேலும், 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். தென்னையில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதி வழங்கியது போல், பனைமரத்திலிருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் கருப்பட்டியை, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்’. இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Palestinians Association , government,allow,Toddy,emphasized,Palm Workers,Union
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்