×

பேறுகால விடுப்பு, தாய்பால் உரிமை குறித்த கேள்விகளுக்கு செயலாளர்கள் பதில் தரவில்லை என்றால் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும்

சென்னை: குழந்தைகளுக்கான தாய்பால் உரிமை, மற்றும் பேறுகால விடுப்பு தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் தரவில்லை என்றால் சம்பத்தப்பட்ட துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கடந்த 2015ல் எம்.பி.பிஎஸ் படிப்பை முடித்த பெண் டாக்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘2 ஆண்டு பணிகாலத்தில் 180 நாட்கள் பேறுவிடுமுறை எடுத்ததால் நான் இரண்டு ஆண்டுகள் முழுமையாக பணி செய்யவில்லை என்று என்னை பயிற்சி மருத்துவ பணியில் இருந்து விடுவித்து சான்று அளிக்கவில்லை. எனவே எனக்கு 2 ஆண்டுகள் மேல் படிப்பு படிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்’. இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பெண்கள் மேம்பாட்டு ஆணையம் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் 36 குழந்தைகளும், 1 மணி நேரத்திற்கு 2ஆயிரத்து 64 குழந்தைகளும், ஒவ்வொரு மாதமும் 1.5 மில்லியன் 15 லட்சம் குழந்தைகளும் பிறக்கின்றன. மத்திய மாநில அரசுகள் தான் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்க முடியும், ஆணையத்தால் எதுவும் செய்யமுடியாது என்று தெரிவித்தார். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பாப்பையா இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க கால அவகாசம் கூறினார். இதையடுத்து இந்த வழக்கை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அன்று, பதில் தரவில்லை என்றால் தமிழக குடும்பல நலத்துறை மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை, மத்திய, மாநில சட்டத்துறைகளின் செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : secretary, questions,breastfeeding,breastfeeding, appear in person
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...