சுதந்திர போராட்ட தியாகி மேக்அப் மேன் முத்தப்பா மரணம்

சென்னை: சுதந்திர போராட்ட தியாகியும் திரைப்பட மேக்அப் கலைஞருமான முத்தப்பா (89), சென்னையில் நேற்று காலமானார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், கன்னட நடிகர் ராஜ்குமார் படங்களுக்கு மேக்அப் மேனாக பணியாற்றியவர் முத்தப்பா. இவர், சுதந்திர போராட்ட தியாகி. இதற்கான பென்ஷனும் பெற்று வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை மரணம் அடைந்தார்.

ஏவிஎம் நிறுவனத்தின் அனைத்து படங்களிலும் இவர் பணியாற்றினார். அப்போது இவரது பணியால் ஈர்க்கப்பட்ட ரஜினி, தனது அனைத்து படங்களிலும் இவரையே மேக்அப் மேனாக நியமித்தார். இவரது மனைவி சேதுலட்சுமி. 9 மகன்கள். இவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. இந்த செய்தி கேள்விபட்டவுடன் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக முத்தப்பா வீட்டிற்கு சென்று அவருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maid ,freedom fight makap man muthappa , Freedom fighter,make up Man,muttappa,death
× RELATED வாலாஜா அருகே பரபரப்பு...