×

மபியில் வேலையை பறிக்கும் உபி, பீகார் தொழிலாளர்கள் சர்ச்சையில் சிக்கிய கமல்நாத்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் புதிய முதல்வராக காங்கிரசின் கமல்நாத் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘இம்மாநில தொழிலாளர்களை 70 சதவீதத்திற்கு சேர்க்கும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே முதலீட்டு சலுகை நிதி வழங்கப்படும். இங்குள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை உபி, பீகார் தொழிலாளர்கள் பறிக்கின்றனர். அவர்களுக்கு உள்ளூர் தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது’’ என்றார்.இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. பாஜ பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ‘‘கமல்நாத் பிரித்தாளும் அரசியலை ஊக்குவிக்கிறார். பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக மக்களை தூண்டி விடுகிறார்.

கமல்நாத்தே ‘அந்நியன்’ பின்னணி கொண்டவர். கான்பூரில் பிறந்த அவர் மேற்கு வங்கத்தில் படித்து, நாடு முழுவதும் தொழில் செய்கிறார். இப்போது மத்திய பிரதேச முதல்வராகி இருக்கிறார். அவரே அவரது கருத்துக்கு எதிராக நடந்து கொண்டிருப்பவர்’’ என்றார்.  மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘‘உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென ஏற்கனவே சட்டங்கள் உள்ளன. அது முன்னாள் மத் திய அமைச்சரான கமல்நாத்துக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் மக்களை தவறாக வழிநடத்துவது போலாகும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kamalnath ,dispute ,Bihar ,UP , Kamalnath,caught,dispute,UP,Bihar,workers
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!