×

சென்னையில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நட்சத்திர விடுதி, கேளிக்கை விடுதிகளுக்கு போதை பொருட்களை விற்க வெளிநாட்டு திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியா நாட்டை சேர்ந்தவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்ததாக குமரேசன், அருண் திவாகர் என்பவர்களை கடந்த 14-ம் தேதி போரூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் போதை பொருட்களை சப்ளை செய்து வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த சைமன் என்பவரை பெங்களூருவில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொக்கைன் என்ற 4 வகையான 518 போதை மாத்திரைகள், எடை இயந்திரம், லேப்டாப், செல்போன், ரூ.30,000 போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து சைமனை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை மையப்படுத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டு வந்தது தெரியவந்தது. சென்னையில் நட்சத்திர விடுதி, கேளிக்கை விடுதிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வகை போதை மாத்திரைகளை பயன்படுத்தும் போது சுமார் 8 மணி நேரம் சுயநினைவின்றி போதையில் மிதப்பார்கள் எனவும் இளம் பெண்களுக்கு தெரியாமல் குளிர் பானங்களில் கலந்துக் கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபடும் கொடூரம் நிகழ்வதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளன. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Nigerian , Chennai, New Year, star hotel, amusement, nigeria, drugs pills
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...