×

ஏர்செல் மேக்சிஸ் மோசடி வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு

டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதில் விதிகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. இதில் அனுமதி பெற்று கொடுக்க சிதம்பரம் மகன், கார்த்தியின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறையும், ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த வழக்கை சிபிஐயும் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை 19 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிதம்பரம், கார்த்தி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் தங்களை கைது செய்வதை தடுக்க கோரி சிதம்பரமும், கார்த்தியும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து டிசம்பர் 18 வரை அவர்களை கைது செய்ய  தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இருவரையும் ஜனவரி 11 வரை கைது செய்ய தடை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aircel Maxis, Fraud case, P. Chidambaram, Karthi, arrested, Delhi Patiala Court
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...