×

பனங்குடி கிராமத்தில் மயான பாதை இல்லாததால் சடலத்தை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம்

நாகை:  பனங்குடி கிராமத்தில் மயான பாதை இல்லாததால் இறந்தவர் சடலத்தை வயல் வழியாக தூக்கி செல்வதால் நெற்பயிர்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான மயானம் ஊரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள காரைமேடு என்ற இடத்தில் உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு கடந்த 50 ஆண்டுக்கு மேலாக சாலை வசதி இல்லாத மயானமாக உள்ளது. இந்நிலையில்,  நேற்று முன்தினம் பனங்ஙகுடி கிராமத்தை சோந்த ராமசாமி என்பவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

இவரது இறுதி சடங்கு அன்று மாலை நடைபெற்றது. உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் உடலை அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த சம்பா நெல் பயிர் வயலில் தூக்கி சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சடலத்தை பாடையில் தூக்கி கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் வளர்ந்த நெல் பயிரில் நடந்து சென்று பயிரை வீணடித்தது விவசாயிகளுக்கும், சடலத்தை வேறு வழியில்லாமல் நெல்பயிர் வளர்ந்த வயலில் தூக்கி சென்றவர்களுக்கும் பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுதியுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘மயானக்கரைக்கு சாலை வசதி கேட்டு நீண்ட நாட்களாக கலெக்டர் மனு கொடுத்து எந்த பயனும் இல்லை. சடலத்தை சேற்றில் தூக்கி செல்வது கடினமானது. சடலத்தை தூக்கி செல்பவர்களும், தொடர்ந்து செல்பவர்களும் நெல்பயிர் செய்யப்பட்ட வயலில் நடந்து செல்வது நில உரிமையாளரான அந்த விவசாயிக்கும் கஷ்டம், சடலத்தை வேறு வழியில்லாமல் தூக்கி செல்லுபவர்களுக்கும் கஷ்டம். நெல் பயிர்கள் மிதிப்படுவது எங்களுக்கு மன கஷ்டமாக உள்ளது. உடன் அரசு  சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : village ,road ,Panangudi , Panankuti, body, violin
× RELATED சாலவாக்கத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை