×

சர்வதேச மென்ஸ் மாஸ்டர் பாடிபில்டிங் : சென்னையை சேர்ந்த அரசு வெண்கலம் வென்று அசத்தல்

பாங்காங்: உலக பாடிபில்டிங் மற்றும் உடலமைப்பு விளையாட்டு கூட்டமைப்பு (World Bodybuilding and Physique Sports Federation) சார்பாக தாய்லாந்து நாட்டில் 10-வது சர்வதேச பாடிபில்டிங் உடலியல் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில்  40-49 வயதிற்குட்பட்டோருக்கான 80 கிலோ பிரிவில் ஏற்கனவே ஆசிய ஆணழகன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த எம்.அரசு பங்கேற்றார்.

alignment=

இவர் ICF-ல் பணிபுரிந்து வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் சென்னையை சேர்ந்த அரசு மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்று அசத்தியுள்ளார். இந்த போட்டியில் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த பவல் உமுர் சாகாவ் முதலிடத்தையும், ஈரானை சேர்ந்த ஹீசேன் இரண்டாமிடத்தையும், தமிழகத்தை சேர்ந்த எம்.அரசு மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

alignment=


சர்வதேச பாடிபில்டிங் உடலியல் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அரசு, கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியிலும் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 52-வது ஆசிய ஆணழகன் போட்டி, புனேவில், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில 80 கிலோ எடை பிரிவில் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பவல் உமுர் சாகாவ் தங்கப் பதக்கம் வென்றார். மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விராஜ் சர்மால்கர் வெள்ளிப் பதக்கம் தட்டிச் சென்றனர். சென்னை, ஆலந்துாரைச் சேர்ந்த 48 வயதான அரசு மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். ஆசிய ஆணழகன் போட்டி மற்றும் சர்வதேச பாடிபில்டிங் உடலியல் விளையாட்டு சாம்பியன்ஷிப் என இரண்டிலுமே வெண்கலத்தை தட்டிச் சென்று தமிழகத்திற்கு மட்டுமல்லாது, இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள எம்.அரசு மேலும் ஏராளமான சாதனை புரிய வாழ்த்துவோம்...

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,Chennai , World Bodybuilding, M. arasu, ICF, Bronze,World Bodybuilding and Physique Sports Federation
× RELATED ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகளே...