×

உடலில் தானாக தீப்பிடிக்கும் குழந்தை ஜெயலலிதா அறிவித்த உதவி இதுவரை கிடைக்கவில்லை

விழுப்புரம்: உடலில் தானாக தீப்பிடித்து எரியும் குழந்தைக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை என கலெக்டரிடம் தாய் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடிமொழியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகன் ராகுலுடன் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு நடந்த குறைகேட்புக்கூட்டத்தில் கலெக்டர் சுப்ரமணியனிடம் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2013 மே மாதம் எங்களுக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான். பிறந்த 9 நாட்களிலேயே அவனது உடலில் தானாக தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அப்போதைய கலெக்டர் பரிந்துரையின்படி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பிறகு உடலில் தானாக தீப்பிடித்து எரிவது குறைந்து ராகுல் குணமடைந்தான். பின்னர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எனக்கும், எனது குழந்தைக்கும் உதவித்தொகை மற்றும் தொகுப்பு வீடு ஒன்றும், எனது கணவர் பிழைப்பு நடத்த நான்கு சக்கர வாகனம் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதாக அறிவித்தார்.  அரசு தருவதாகக்கூறிய எந்தவொரு உதவியும் இதுநாள் வரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறோம். குழந்தை ராகுல் நெடிமொழியனூரில் உள்ள அரசுப்பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறான். தீக்காயம் ஏற்பட்ட தலை மற்றும் வயிற்றுபகுதியில் பெரிய தழும்புகள் உள்ளன. அவனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. தினக்கூலிக்குச்சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jeyalalitha ,baby , Jayalalithaa's baby , volunteered ,body was still available
× RELATED கணவர் இறந்த நிலையில் ஆறாவதாக பிறந்த...