×

ராமேஸ்வரம்- மந்துவாதி ரயில் சேவை பாதியாக ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:வாரணாசி டிவிசனுக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி வரும் டிசம்பர், 20ம் தேதி முதல் ஜனவரி, 6ம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி ராமேஸ்வரம் - மந்துவாதி வாராந்திர ரயில் வரும் டிசம்பர், 19ம் தேதி அலகாபாத் - மண்டுடையா இடையே ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் வரும், 24ம் தேதியும் இதேபகுதியில் ரத்து  செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram-Mandu Railway , Rameswaram - Mandu, Train service ,canceled , half
× RELATED தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில்...