×

மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய காங்கிரஸ் துணையாக இருக்கும்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய, காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் போது, தமிழகத்திலும் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்.அண்ணா, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழகத்துக்கு பல நல்ல செயல்கள் நடந்தன. காங்கிரஸ் ஆட்சியின்போது, நல்ல செயல்கள் நடந்துள்ளன. ஆனால், தற்போது அமைச்சர்களாலும், அமைச்சரவையாலும்  தமிழகத்துக்கு வரலாறு காணாத வகையில் மிக பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஊழல்களில் சிக்கியுள்ள அமைச்சர்கள், சிபிஐ அலுவலகத்தில் பலமணி நேரம் காத்து நின்று விசாரணையை எதிர்கொண்டு  வருகின்றனர். இது மிக பெரிய வெட்கக்கேடு. இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க மாட்டார். ஏனென்றால் அவர் மீதே ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால், அவர் இந்த ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க  முடியாது. எடப்பாடியும் பதவி விலக வேண்டும்  ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுனர் பன்வாரிலால் புரோகித் உடனடியாக நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும்.பாஜ அரசின் ஊழலை மறைப்பதற்காகவே திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது பாஜவும் அதிமுகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக, அலட்சியமாக  செயல்படுகிறது.தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில், தமிழக அரசு சரியாக கையாளவில்லை. இனிமேல் உச்ச நீதிமன்றத்திலாவது சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வாதிட்டு நல்ல தீர்ப்பை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,Congress ,interview ,Tirunavukkarar , MK Stalin,supporter ,e Congress , Tirunavukkarar
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...