×

கூடலூர்-மைசூர் சாலையில் யானைகள் மோதல்: கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கூடலூர்:கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரண்டு காட்டு யானைகள் ஆக்ரோஷமாக ேமாதின. சுற்றுலா பயணிகள் யானைகளின் மோதலை கண்டு ரசித்தனர்.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்தை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான  சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை  இந்த முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக செல்கின்றது.  இவ்வழியே வாகனங்களில் செல்பவர்கள் யானைகள், மான்கள், மயில் மற்றும் காட்டெருமைகளை காண முடியும்.

இந்நிலையில் நேற்று காலை சுமார் 6 மணியளவில்  தெப்பக்காடு- கார்குடி இடையே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இரண்டு ஆண் காட்டு யானைகள் ஒன்றோடு ஒன்று பிளிறியபடி ஆவேசமாக மோதிக்கொண்டன.யானைகளின் அதிபயங்கர மோதலை கண்ட வாகனஓட்டிகள் 100 அடி தூரத்துக்கு முன்பாகவே நிறுத்தி விட்டனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம்  பாதிப்படைந்தது. 10 நிமிடத்திற்கும் மேலாக நடந்த இச்சண்டையை  சுற்றுலா பயணிகள் செல்போன்களில் போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் ஒரு யானை பின் வாங்கியதால் சண்டை முடிவுக்கு வந்தது. இதையடுத்து யானைகள் வனத்திற்குள் புகுந்து மறைந்தன. பின்னர் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Koodalur-Mysore Road , Elephants, conflict,Koodalur-Mysore Road, Tourists
× RELATED கூடலூர்-மைசூர் சாலையில் யானைகள் மோதல்: கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்