×

டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளையடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு நடத்தி வரும் மதுவிற்பனை நிலையங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வது கவலைக்குரியது. அவர்கள் இரவு 10 மணி வரை விற்பனை முடிந்து,  விற்பனையில் கிடைத்த லட்சக்கணக்கான ரூபாயுடன் வீடு செல்லும்போது சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள காட்டேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை எண் 2936ல் பணிபுரிந்த ஆனந்தன், முருகன், பணத்துடன் வீடு திரும்பியபோது மர்மநபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு ஆபத்தான  நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.3.50 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்து சென்றுள்ளனர். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. அவர்களுக்கு உயரிய சிகிச்சை அளித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய கொள்ளையர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். மதுபான கடை பணியாளர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு  உள்ளாவதை தடுத்து நிறுத்தி உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmak ,Mudrasan , Taskmakers, gunfire, Muthrasan
× RELATED முத்தரசன் கண்டனம் அதிமுக உட்கட்சி பூசலால் கோமா நிலையில் அரசு