×

ரபேல் ஒப்பந்தம் விவகாரம் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழி நடத்துகிறது : நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

மும்பை: ரபேல் போர் விமான கொள்முதல் விலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எல்லா உண்மைகளையும் தெரிந்துக் கொண்டே மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 58,000 கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ரபேல் போர் விமானம் முறைகேடு குறித்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் கூறியது. இந்த நிலையில், அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள பாஜ அலுவலகத்தில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் மற்றும் விலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டே மக்களை தவறாக வழிநடத்துகிறது. நாட்டின் ஒரு பழமையான கட்சியை நடத்தும் குடும்பத்தினர், ரபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை கூட காது கொடுத்து கேட்காமலும், மதிக்காமலும் செயல்படுவது வியப்பளிக்கிறது. காந்தி குடும்பத்தினர் முரட்டுத்தனத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். ரபேல் போர் விமான கொள்முதல் விலை குறித்த விவரங்களை மத்திய அரசு, மத்திய தலைமை தணிக்கைக் குழு அதிகாரியிடம் வழங்கி இருக்கிறது. நாடாளுமன்ற நடைமுறைப்படி, தணிக்கை குழு அதை சரிபார்த்து விட்டு அறிக்கை தாக்கல் செய்யும். அதன் பிறகு அந்த அறிக்கை பொதுக்கணக்கு குழுவிடம் தாக்கல் ெசய்யப்படும். பொதுக்கணக்கு குழு பார்த்த பிறகுதான் அது பொதுமக்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். இதுதான் நடைமுறை. இதுதான் நடந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்கூட இந்த நடைமுறை குறித்தும் விவரங்கள் குறித்தும்தான் விளக்கி இருக்கிறோம். எனினும் தகவல் பரிமாற்றத்தில் ஏதேனும் குழப்பம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறோம். அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் தெளிவுபடுத்த கோரியுள்ளோம். கோரட்டில் இருந்து பதில் வரும்வரை காத்திருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael Agreement The Congress Party ,Nirmala Seetharaman , Rafael Agreement, Congress Party misleads people,Nirmala Seetharaman's allegation
× RELATED ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களில்...