×

7வது நாளாக தொடரும் வி.ஏ.ஓக்களின் போராட்டம்: 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

நாகை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்த போராட்டம் 7வது நாளாக தொடர்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கணினி, இணைய வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வெளியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 10ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகையில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே பதாகைகளை ஏந்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நம்பியூர், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி தாலுகாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் திருவள்ளூர், திண்டிவனம், சிதம்பரம், மயிலாடுதுறை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் போராட்டங்களை தீவிரப்படுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே டிசம்பர் 10ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசிடம் தெரிவித்தும், அரசாங்கம் அவர்களை அழைத்து பேசி ஒரு தகுந்த முடிவுகளை எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் அரசு இருப்பதாக குற்றம் கூறியுள்ளனர். எனவே கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VAO,Struggle,20 point request,TN Government
× RELATED வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை