பெர்த் : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் , 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. பயிற்சி போட்டியில் விளையாடிய போது இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா
காயமடைந்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ப்ரித்வி ஷா அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மயக் அகர்வால் அணியில் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி