மக்கள் நலன் கருதி எடுத்த நடவடிக்கைகள் வரலாற்றில் இடம்பெறும் : அதிபர் சிறிசேனா

கொழும்பு : ஜனநாயகத்தின் மீதான மதிப்பு காரணமாகவே பிரதமர் பதவியை ஏற்று கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்கேவிற்கு அழைப்பு விடுத்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியில் இருந்து ரணில் நீக்கம், ராஜபக்சே நியமனம், தேர்தல் அறிவிப்பு ,சிறிசேனா முடிவுக்கு தலையாட்ட உச்சநீதிமன்றம் மறுப்பு என 50 நாட்களாக இலங்கை அரசியல் சூடு பிடித்திருந்தது. பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு ஏற்பட்ட நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவிற்கு அதிபர் சிறிசேனாவே நேற்று மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இது தொடர்பாக பேசிய அதிபர் சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணிலை தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் தாம் நீக்கவில்லை என்றும் நாட்டின் சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலான அரசியல் நிலைமைகளை தீற்க பொதுத் தேர்தல் நடத்துவதே சிறந்தது என்று தாம் நம்பியதாகவும் சிறிசேனா தெரிவித்தார். தமது அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் நலன் கருதியே எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.  

மேலும் ரணில் பிரதமராகும் முடிவிற்கு பெரும்பான்மை கிடைத்ததால் நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு மதிப்பளித்ததாகவும் அவருக்கு பதவி பிரமாணம் வழங்குவதில்லை என்பது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும் கூறினார். இதனிடையே ரணில் தலைமையிலான அமைச்சரவையில் 30 பேர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவி ஏற்று இருப்பதற்கு இந்தியாவும் வரவேற்பு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>