×

ஆல்ப்ஸ் மலைத்தொடரில் போட்டியாளர்கள் அசத்தல்: பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

ஆல்ப்ஸ்: ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பனிப்பிரதேசத்தில் சவால்களை எதிர்கொண்டு முன்னேறும் பந்தயத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். ஆல்ப்ஸ் மலைதொடரில் உடல் நடுங்கும் கடும் குளிரில் போட்டிகள் நடத்தப்பட்டன. தடைகளை கடந்து இலக்கை தொட போட்டியாளர்கள் ஆர்வத்துடன் முனைப்பு காட்டினர்.

காவடியை போல சுமையை தூக்கி சுமப்பது, தடைகளை தாண்டுவது, தரைகளில் கால் படாமல் கம்பிகளில் தொங்குவது என பல்வேறு கடினமான சவால்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன. கடும் சவால்கள் நிறைந்த இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்குபெற்றனர். மகளிருக்கும் தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Competitors ,countries , Competitors,Alps Mountains,Participation,different countries
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...