×

நடப்பாண்டில் நாடு முழுவதும் 95 புலிகள் கொல்லப்பட்டுள்ளன : தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்

டெல்லி : கடந்த ஒரே ஆண்டில் 95 புலிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் 41 புலிகள் வனப்பகுதிக்கு வெளியில் கொல்லப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 19 புலிகள் உயிரிழந்து இருப்பதும் அதில் 14 புலிகள் வனப்பகுதிக்கு வெளியில் கொல்லப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 190 புலிகள் இருப்பதாகவும் அதில் 74 புலிகள் வனப்பகுதிக்கு வெளியில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடுகள் அழிப்பு, புலிகளின் வாழ்விடத்தில் சாலை அமைப்பது உள்ளிட்ட காரணங்களால் உணவு, இருப்பிடம் வேண்டி புலிகள் வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்துவிடுவதாகவும், இதனாலயே மகாராஷ்டிராவில் புலிகள்  அதிகபட்சமாக உயிரிழக்கின்றன என்றும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 22 புலிகள் இறந்துள்ளன. இதில் 11 புலிகள்  வனப்பகுதிக்கு வெளியில் கொல்லப்பட்டு இருக்கிறது. அடுத்தபடியாக கர்நாடகா மாநிலத்தில் 15 புலிகள் கொல்லப்பட்டுள்ளன.  பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உடல் உறுப்புகளுக்காக புலிகள் கொல்லப்படுவதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : LTTE ,cadres , tiger, mortality,reserves,NTCA ,Maharashtra,animal, conflict
× RELATED விடுதலைப் புலிகள் நினைவுதினம்...