×

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இரட்டை சதம் விளாசினார் நியூசி., வீரர் டாம் லாதம்

வெலிங்டன்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து வீரர் டாம் லாதம் இரட்டை சதம் விளாசியுள்ளார். இது அவரது முதல் இரட்டை சதம் ஆகும்.  இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடக்கிறது. முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் 282 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டிக்வெல்லா 80 ரன்கஎடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சவுத்தீ 6, வாக்னர் 2, போல்ட், கிராண்ட்ஹோம் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் வில்லியம்சன்- டாம் லாதம் ஜோடி பொறுப்பாக ஆடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 91 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். மறுமுனையில், சிறப்பாக ஆடிய லாதம் சதத்தை பூர்த்தி செய்தார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த அனுபவ வீரர் டெய்லர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து கிராண்ட்ஹோம் உடன் ஜோடி சேர்ந்த டாம் லாதம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய லாதம் டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 506 ரன்களுடன் விளையாடி வருகிறது. லாதம் 214 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test ,Tom Latham ,Sri Lanka ,Twenty Century Newcastle , New Zealand vs Sri Lanka, 1st Test, Tom Latham
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...