×

கொள்கை என்பது வேறு விஷயம் கருணாநிதி அனைத்து கட்சியினர் மரியாதையையும் பெற்றவர்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புகழாரம்

வேலூர்: அனைத்து கட்சியினரின் மரியாதையையும் பெற்றவர் கருணாநிதி என்று வேலூரில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.வேலூரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி:கடந்த 6 மாதங்களில் தமிழகத்தின் சாலை மேம்பாட்டுக்காக மத்திய அரசு ₹1 லட்சம் கோடிக்கு மேல் திட்டங்கள் கொடுத்துள்ளது. அதை பயன்படுத்திக் கொள்வது நம்முடைய கடமை.  சென்னையில் கருணாநிதியின் உருவ  சிலை திறக்கப்படுகிறது. கட்சியின் கொள்கை என்பதெல்லாம் வேறு விஷயம். அவருடைய செயல்பாட்டினால் அனைத்து கட்சியினரின் மரியாதையையும் பெற்றவர் கருணாநிதி.

ஸ்டெர்லைட் ஆலையை எதற்காக மூடினார்கள் என மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பை வலியுறுத்துகின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நானும் ஆரம்பத்தில்  போராடினேன். அன்றைக்கு பலர் ஆதரவு கொடுத்தும், சட்டத்துக்கு புறம்பான விஷயங்களை செய்தும் அதை கொண்டு வந்தார்கள். தூத்துக்குடி துறைமுகம் அழிவை நோக்கி செல்வதற்காக பல செயல்கள் செய்யப்பட்டுள்ளது. இது  குறித்து முழு ஆய்வு செய்ய வேண்டும். 5 மாநில தேர்தல் முடிவு பாஜவுக்கு சிறு சறுக்கல்தான். பாஜ கீழே விழவில்லை. பிரான்ஸ் நாட்டினர் கன்னியாகுமரிக்கு எதற்காக வந்தார்கள்? எதற்காக துறைமுகத்தை புகைப்படம் பிடித்தார்கள்? அதை என்ன  செய்யப்போகிறார்கள்? என்ன சதிகள் நடக்கப்போகிறது? அருகில் உள்ள இலங்கை அரசின் தன்மைபற்றி நாம் மனதில் கொள்ள வேண்டும். நாளை தமிழகத்துக்கு பெரிய ஆபத்து வந்து கொண்டிருக்கிறது.கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக தமிழக அரசு கூடுதல் அறிக்கை வழங்கியதும், 2 நாட்களில் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponnathirakrishnan ,Karunanidhi ,parties , The policy , Karunanidhi , The Honorable,Ponnathirakrishnan
× RELATED கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்:...