×

ஹாக்கி பைனலில் நெதர்லாந்து அதிர்ச்சி உலக சாம்பியன் பெல்ஜியம்

புவனேஸ்வர்: உலக கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் ‘சடன் டெத்’ வரை போராடிய நெதர்லாந்து அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற பெல்ஜியம் முதல் முறையாக உலக சாம்பியன் ஆனது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடந்த இப்போட்டியில் 60 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி டிரா செய்தன. இதனால், பெனால்டி சூட்அவுட் தரப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் மீண்டும் சமநிலையில் இருந்தன. இரு அணிகளும் 3 வாய்ப்புகளை வீணடித்தன.

இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க ‘சடன் டெத்’ முறை கொண்டு வரப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய பெல்ஜியத்தின் வான் அபுபெல் கோல் அடித்தனர். அடுத்து வந்த நெதர்லாந்தின் ஹெர்ட்ஸ்பெர்கர் வாய்ப்பை நழுவ விட அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் பெல்ஜியம் 3-2 என்ற கோல் கணக்கில் முதல் முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது. 3 முறை உலக சாம்பியன் ஆன நெதர்லாந்து 2ம் இடத்துடன் ஆறுதலடைந்தது. 3-4ம் இடத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியா 8-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்று வெண்கலம் கைப்பற்றியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Netherlands Champion ,Hockey Finale World Champion ,Belgium , Hockey, Netherlands, World Champion, Belgium
× RELATED புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி...