×

ஊதியத்தை கூட தர முடியாமல் உள்ளாட்சிகள் திணறல்: கே.ஆர்.கணேசன், உள்ளாட்சி துறை ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி ேதர்தல் நடத்தாத காரணத்தால் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதியை மாநில அரசு பெற முடியவில்லை. இதனால், மாநில அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த நிதியை உள்ளாட்சி  அமைப்புகளுக்கு வழங்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ₹6 ஆயிரம் கோடி நிதி கிடைக்கவில்லை.இதனால் புதிய சாலைகள் அமைத்தல், புதிய பாலம் கட்டுதல், சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால்களை சீரமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால்  அடிப்படையான பணிகளான  குப்பைகள் எடுத்தல், குடிநீர் விநியோகம், புதிய மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டி  கட்டுவது உள்ளிட்ட நடைமுறை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் டெங்கு  உள்ளிட்ட நோய்களை ஒழிக்க போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. நோய்களை கட்டுபடுத்துவதற்கான மருந்துகளும் வாங்கப்படவில்லை.

மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றனர். மேலும் தற்காலிக  மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை கூட உள்ளாட்சி அமைப்புகளால் வழங்க முடியவில்லை. மாநகராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹624  வழங்க வேண்டும். ஆனால் ₹350 தான்  ஊதியமாக வழங்குகின்றனர். நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ₹510 தர வேண்டும். ஆனால் ₹260 தான் தருகின்றனர். உள்ளாட்சி பகுதிகளில் நிலைமை இதை விட  மோசமாக உள்ளது. மேலும் பல ஊராட்சிகளில் தொகுப்பூதியமாக ₹3 ஆயிரம் முதல் ₹4 ஆயிரம் வரை தான் வழங்குகின்றனர். வார்டு மறுவரையறை பணிகளும் முறையாக நடைபெறவில்லை. பல இடங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, திண்டுக்கல் மாநகராட்சியை  சுற்றியுள்ள பகுதிகள்  எல்லாம் மாநகராட்சியுடன் இணைக்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையும் முறையாக செயல்படுத்தபடவில்லை. தற்போது முடிக்கப்பட்டுள்ள வார்டு  மறுவரையறையில் முன்பு இருந்த 48  வார்டுகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் நகரை சுற்றி உள்ள 10 ஊராட்சிகள் பெரிதும் பாதிக்கப்படும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி நிதி  போன்ற திட்டங்கள் இந்த ஊராட்சிகளில்  செயல்படுத்தப்படாது.  

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் துப்புரவு பணிகளை தனியாருக்கு கொடுப்பதற்கு அரசு முயன்று வருகிறது. இதைப் போன்று பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் துப்புரவு  பணிகளை தனியாருக்கு கொடுக்க அரசு முயன்று வருகிறது. நாங்கள் போராட்டங்களை நடத்திய பின்னர் அரசு தாமதம் செய்கிறது. தனியாரிடம் விட தொடர்ந்து முயன்று வருகிறது.உள்ளாட்சி பிரநிதிகள் இல்லாத காரணத்தால் பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. பணிமாறுதலுக்கும் பல லட்சம் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது.  சமீபத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இரண்டு நகராட்சி ஆணையர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு, உள்ளாட்சி தேர்தல் நடத்தாதும் முக்கிய காரணம். உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் ஆட்கள் இருக்கும்  பட்சத்தில், முறைகேடு நடந்தால் தட்டி கேட்க ஒரு வாய்ப்பு இருந்து இருக்கும். எனவே, இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் டெங்கு உள்ளிட்ட நோய்களை ஒழிக்க போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. நோய்களை கட்டுபடுத்துவதற்கான மருந்துகளும் வாங்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Strike ,KN Gonzalez ,Local Government Employees Federation , salary, Disagreeable, Contents , KR Ganesan, Local General Secretary ,Local Government ,Department
× RELATED கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி...