×

சாதாரணமான அரசியல்வாதி அல்ல தமிழக மக்களின் குரலாக இருந்தவர் கலைஞர் : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புகழாரம்

சென்னை: கலைஞர் தமிழக மக்களின் குரலாக விளங்கியவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புகழாரம் சூட்டினார்.பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:தமிழின தலைவரின் நினைவை போற்ற நாம் இங்கு கூடியிருக்கிறோம். தலைவர் கலைஞர் ஒரு சாதாரணமான அரசியல்வாதி அல்ல. அவர் தமிழக மக்களின் குரலாக இருந்தார். நான் முதல் முறையாக கலைஞர் வீட்டிற்கு  சென்ற போது, அவர் ஒரு பெரிய வீட்டில் இருப்பார். ஏராளமான பெரிய, பெரிய பொருட்கள் அங்கே இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அங்கு அவரின் எளிமை, நேர்மை, தூய்மையை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். நான் ஒரு  இளைஞனாக அவரை பார்த்த போது, பல ஆண்டுகள், பல பல ஆண்டுகள் முதல்வராக இருந்தவரின் எளிமை, நாணயம், அகம்பாவம் இல்லாத நிலையை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஒரு இளம் அரசியல் தலைவராக அவரை  சந்தித்த போது அது எனக்கு உந்துதலாக, வழிகாட்டுதலாக அமைந்திருந்தது.

நான் கலைஞர் சந்திப்பை மட்டும் நினைவில் கொள்ளவில்லை. அவரின் வழிகாட்டுதலை, பின்பற்றக்கூடிய வழிகாட்டுதலை எனக்கு காட்டி விட்டு சென்றதை நினைத்து பார்க்கிறேன், ஞாபகப்படுத்தி பார்க்கிறேன். கலைஞர்  மக்களின் குரலை பாதுகாப்பவராக, இங்குள்ள அரசியல் அமைப்புகளை பாதுகாப்பவராக, இங்குள்ள அரசியல் அத்தனை சட்டங்களையும் பாதுகாப்பவராக கலைஞரை பார்க்கிறேன். இப்போது ஒரு அரசாங்கம் இருக்கிறது. தமிழ் கலாசாரத்தை, தமிழ்பண்பாட்டையும், அனைத்து அமைப்புகளையும் அழிப்பவர்களாக தான் நான் பார்க்கிறேன். இப்போதுள்ள அரசாங்கம் தான் நினைக்கக்கூடிய ஒன்றை நிறைவேற்றும்  அரசாங்கமாக மட்டும் தான் இருந்து வருகிறது. கோடானு, கோடி மக்களின் குரல்களை மதிக்காத அரசாங்கமாக இருந்து வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு மொழிகளை, பண்பாட்டை, கலாசாரத்தை மதிக்க வேண்டியதில்லை  என்ற அரசாங்கமாக இருக்கிறது. கலைஞரின் நினைவை மனதில் கொண்டு இப்போதுள்ள பிஜேபி அரசாங்கத்தை எதிர்காலத்தில் அகற்றுவோம்.

இந்தியாவின் ஒருமைப்பாட்ைட அழிக்கிற முயற்சியை நாம் எந்த காலத்திலும் ஏற்க போவதில்லை. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற சுயமான பல்வேறு அமைப்புகளை அடக்கி வைப்பதை ஒரு  போதும் ஏற்க போவதில்லை. நாம் ஒன்றுபட போகிறோம். நாம் ஒன்றுப்பட்டு நாட்டுக்கான காரியத்தை செய்வோம். நான் இங்கு வந்ததை பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறேன். பேசியதை பெருமையாகவும் கருதுகிறோம்.  கலைஞரை பற்றி பேசும் போது தமிழ்நாட்டின் கலாசாரத்தை பற்றி பேசுவதாக கருதுகிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.முடிவில் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Gandhi ,politician ,Tamil ,Congress , politician,, Tamil ,people, Congress leade,r Rahul Gandhi ,praises
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...