×

டிக்கெட் எடுக்காமல் சென்ற பயணியால் பஸ் கண்டக்டருக்கு ‘மெமோ’ வழங்கி எம்டிசி நிர்வாகம் அதிரடி : பழிவாங்கும் போக்கு என தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

சென்னை: அரசு பஸ்சில் பயணி ஒருவர் ‘டிக்ெகட்’ எடுக்காமல் பயணித்ததற்காக நடத்துனருக்கு, நிர்வாகம் ‘மெமோ’ வழங்கி இருக்கிறது. இது திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல் என்று போக்குவரத்துத்துறை தொழிற்சங்கங்கள்  குற்றம்சாட்டி உள்ளனர்.
சென்னை மாநகர ேபாக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில், பல்வேறு வழித்தடங்களில் 2,500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினசரி, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர். பீக்ஹவர்சில் சிலர் டிக்கெட் எடுக்காமல் கண்டக்டரை ஏமாற்றி அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுகின்றனர். காரணம் பஸ்சில் நிற்கக்கூட இடமில்லை என்பதால் கண்டக்டர் ஒரே இடத்தில் நின்றபடி டிக்கெட் எடுப்பது ஏமாற்றுபவர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. இந்த ஓசி பயணிகளை பிடிக்க போக்குவரத்து துறையில் அடிக்கடி சோதனை நடத்தி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் நடத்துனர்களுக்கு எவ்விதமான தண்டனையும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் சமீபகாலமாக பயணிகள் ‘டிக்ெகட்’ எடுக்காமல் பயணித்தால், பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், நடத்துனர்களுக்கு ‘மெமோ’ கொடுக்கப்பட்டு பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் கடந்த, 13ம் தேதி நடந்துள்ளது. அப்போது அரசு பஸ் ஒன்றில் பயணி ஒருவர் டிக்ெகட் எடுக்கவில்லை. இதை பரிசோதகர்கள் பிடித்து, அபராதம் விதித்தனர். மேலும் அந்த பஸ்சில் பணியாற்றிய நடத்துனருக்கு ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து போக்குவரத்துத்துறை தொழிற்சங்கத்தினர் சிலர் கூறியதாவது: எல்லா பயணிகளையும் டிக்ெகட் வாங்க வேண்டும் என்று கண்டக்டர்கள் வற்புறுத்துகிறார்கள். ஆனால் பீக்ஹவர்சில் சில பயணிகள் டிக்கெட் எடுக்காமல் ஏமாற்றுவதை கண்டுபிடிப்பது கடினம். பிடிப்பட்டால் பயணிகளிடம் அபராதம் விதிக்கலாம்.

ஆனால் அதைவிடுத்து ஊழியர்களிடம் எந்த வகையில் பணம் பிடித்தம் செய்வதுடன் நடத்துனருக்கு ‘மெமோ’ கொடுக்கின்றனர்.இதனால் பெரும்பாலான ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்பு அப்படி செய்வதில்லை. அதிகாரிகள் திட்டமிட்டு ஊழியர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : management ,MDC ,bus conductor ,passenger ,unions , passenger,ticket, The MTC administration, 'Memo' , accused
× RELATED காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்