×

மலேசிய மணல் விற்பனையை அதிகரிப்பதற்காக சென்னைக்கு எம்சாண்ட் கொண்டு வர தடை: அரசின் செயலால் கட்டுமான சங்கங்கள் அதிர்ச்சி

சென்னை: மலேசிய மணல் விற்பனைக்காக சென்னைக்கு எம்சாண்ட் கொண்டு வர தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கையால் கட்டுமான சங்கங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து, ₹548 கோடி செலவில் 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய முடிவு செய்தது. தொடர்ந்து, 56,750 மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்த மணலுக்கான விற்பனை கடந்த அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், 50 நாட்களில் முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக ஒப்பந்த நிறுவனம் சார்பில் 52 ஆயிரம் டன் மணல் மலேசியா துறைமுகத்தில் இருந்து ரபேல் குவாய் என்ற கப்பல் மூலம் கடந்த நவம்பர் 20ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து, கடந்த நவம்பர் 27ம் தேதி 55 ஆயிரம் டன் மணல் ஏற்றி கொண்டு அபிராடி நாரி என்ற பெயர் கொண்ட 3வது கப்பல் எண்ணூர் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. தற்போது வரை 45 ஆயிரம் டன் மணல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் மலேசிய மணல் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு மணல் விலை ஒரு யூனிட்  ₹10.340க்கு விற்பனை செய்யப்படுவதே முக்கிய காரணம். எனவே, மணல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்ைக வைத்தனர். இதையேற்க அரசு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், மணல் விற்பனையை அதிகரிக்க அரசு தரப்பில் பல்வேறு விதமான மறைமுக நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணலை லாரிகளில் கொண்டு வருவதை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சென்னை எல்லையில் வருவாய்துறை அதிகாரிகள் தலைமையில் வேலூர், சித்தூர், திண்டிவனத்தில் இருந்து சென்னை வரும் லாரிகள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், சென்னையில் கட்டுமான பணிக்காக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் வரும் என்று காத்திருந்த கட்டுமான நிறுவனங்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,government ,Malaysian , increase Malaysian, sand sales,embassy , Chennai, government's action
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...