×

பெய்ட்டி புயல் காக்கிநாடா அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ‘பெய்ட்டி’ புயல் இன்று பிற்பகலில் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 10 நாட்களாக நிலை கொண்டு  இருந்த காற்றழுத்தம் வலுபெற்று பல்வேறு நிலைகளை கடந்து, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 13 கிமீ முதல் 16 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடல் பரப்பில் உள்ள ஈரப்பதம் மற்றும் தரைப்பகுதியில் உள்ள காற்று ஆகியவற்றை உறிஞ்சி வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும், உள்தமிழகத்திலும் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று காலை முதல் பலத்த குளிர் காற்று வீசிவருகிறது. கடலில் அதிக அளவில் சீற்றம் காணப்படுகிறது. அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகமாக இருந்தது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கடந்த நான்கு நாட்களாக எச்சரிக்கப்பட்டதால், மீனவர்கள் தமிழக கடலோரப் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல், கரையோரங்களில் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 300 கிமீ தொலைவில் நிலை கொண்டு இருந்தது. தற்ேபாது மணிக்கு 16 கிமீ வேகத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை- தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வருகிறது. இதனால், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். தெற்கு ஆந்திராவில் கனமழை பெய்யும்.

இன்று பிற்பகல் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். அந்த புயலுக்கு ‘பெய்ட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் இன்று பிற்பகலில் மசூலிப்பட்டினம்- காக்கி நாடா அருகே கரையைக் கடக்கும். அப்போது வட தமிழகத்தில் மணிக்கு 65 கிமீ முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும். தெற்கு  ஆந்திராவில் மணிக்கு 75 கிமீ வேகம் முதல் 100 கிமீ வேகம் வரை காற்று வீசும். பெயிட்டி புயல் கடலோரப் பகுதியை நெருங்கி வருவதை அடுத்து சென்னை, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொடி எண் 3 ஏற்றப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Baiti ,shore ,Kakinada , Baiti storm , Kakinada, Crossing , afternoon
× RELATED ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு